Koha home
கூமாங்குளம் பொதுநூலகத்தின் இணையவழி புத்தகப்பட்டியல் பக்கத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்

வடக்கு மாகாணத்தின் வந்தோரை வாழ வைக்கும் வன்னி மண்ணாம் வவுனியா மாவட்டத்திலே ஒரு நகரசபையும் நான்கு பிரதேச சபைகளுமாக வவுனியா வடக்கு பிரதேச சபை,வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை,வவுனியா தெற்கு சிங்கள பிரதேச சபை,வெங்கலச்செட்டிகுளம் பிரதேச சபை என நான்கு பிரதேச சபைகளையும் கொண்டமைந்த பிரதேசம் இதுவாகும். வடக்கின் முக்கிய கேந்திர நிலையமான இவ்வவுனியா பிரதேசத்தில் 588.20 சதுர கிலோமீற்றர் பரப்பளவில்182 கிராமங்களில் 104610 பொது மக்களைக் கொண்டமைந்த எமது வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையானது கிழக்கு மூலை தெற்கே பேயாடி கூளாங்குளம், கிழக்கு மூலை வடக்கே ஓமந்தை, நடுச்செட்டிக்குளம் பம்பைமடு ஆகிய இடங்களில் தமது உப அலுவலகங்களின் ஊடாக பொது மக்களுக்கு தமது சிறப்பான சேவையை வழங்கி வருகின்றது. அந்த வகையில் பிரதேச சபையினால் வழங்கப்படுகின்ற சேவைகளில் சிறப்பான சேவையான நூலக சேவையினை கூமாங்குளம் பொது நூலகம்,ஓமந்தை பொது நூலகம் ஆகிய பொது நூலகங்களின் ஊடாக சிறந்ததொரு வாசிக்கும் சமூகத்தை உருவாக்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
இப் பிரதேச சபையில் கூமாங்குளம் பொது நூலகமானது 1996 மே 21 இல் ஆரம்பிக்கப்பட்டது. இந்நூலகத்தில் தமிழ்,ஆங்கிலம்,சிங்களம் ஆகிய மொழிகளில் 15073 நூல்கள் காணப்படுகின்றன. 1224 அங்கத்தவர்களைக் கொண்டு இயங்கி வருகின்ற இந்நூலகத்தில் இரவல் பகுதி, உசாத்துணை பகுதி,சிறுவர் பகுதி,சிறப்பு சேகரிப்புப்பகுதி,பத்திரிகை பகுதி ஆகிய பகுதிகள் காணப்படுகின்றன.அத்துடன் பாடசாலைகளுக்கு நூலக நடமாடும் சேவைகள் வழங்கல் போன்ற இன்னோரன்ன சேவைகளை பொது மக்களுக்கு வழங்கி வாசிப்புத்திறனை வளர்த்துவருவதில் பெரும் பங்காற்றி வருகின்றது.
2023 ஆம் ஆண்டில் தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபையுடன் ஐக்கிய இராச்சியத்தின் அபிவிருத்தி வேலைத்திட்டம் (UNDP) உம் இணைந்து இப்பொதுநூலகத்தில் டிஜிட்டல் நூலக திட்டத்தினை நடைமுறைப்படுத்தி வருகின்றது.
ஒரு மேம்பட்ட மற்றும் புதுப்பிக்கப்பட்ட நூலக தன்னியமாக்கல் அமைப்பை வழங்குவதன் மூலம் நாட்டில் நூலக அமைப்பின் தரம் மற்றும் செயற்றிறனை மேம்படுத்துவதற்கு இது அவசியமாகின்றது. தற்போது நூலகம் பொதுமக்களுக்கு டிஜிட்டல் நூலக சேவையை வழங்குவதற்கு நவீன இலத்திரனியல் சாதனங்கள் பொருத்தப்பட்ட இந்த ஆன்லைன் பொது அணுகல் பட்டியலாக்கம் முறைமையானது (OPAC)பயனாளர்கள் தேவையான புத்தகங்களை இலகுவாக தேடவும்,கண்டுபிடிக்கவும் அதன் இருப்பிடத்தை அறியவும் பெரிதும் உதவுகின்றது.